தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்

சமீபத்தில் வெளியான பாவ கதைகள் இணைய தொடரில் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் பண்ணா உட்ரணும் படத்தில் அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார். முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்ததால் தொடர்ந்து வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் இவருக்கு குவிகிறது.
ஆனால் இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரும் கூட. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘என் தந்தை வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர்.  தொடக்கத்தில் ஒளிப்பதிவாளராக இருந்தேன். 3 இந்தி படங்கள் இயக்கினேன். இந்தியில் படம் தயாரித்தபோது ஐஸ்வர்யா ராய் என் படத்தில் தான் நடிப்பதாக இருந்தது.
பதம் குமார்
உலக அழகி போட்டியில் வென்ற பின்னர் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை. பின்னர் தயாரிப்பு, வினியோகத்தில் இறங்கிவிட்டேன். நானி, வாணி கபூர் நடிப்பில் வெளியான ஆகா கல்யாணம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன், வரலட்சுமி நடித்த போடா போடி படங்கள் என் தயாரிப்பு தான்.
என் தயாரிப்பில் அடுத்து பங்கஜ் திரிபாதி நடிப்பில் இந்தி படம் தொடங்க உள்ளது. நீங்கள் என்னை இயக்குனராக்கினீர்கள். நான் உங்களை நடிகராக்குகிறேன் என்று விக்னேஷ் சிவன் உணர்வுபூர்வமாக சொன்னதால் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது.  நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
x