புதிய தொழில் துவங்கிய ஹன்சிகா ; வெளியான வீடியோ

சினிமாவில் நடித்து கோடிகளில் சம்பாதிக்கும் போதே வேறு தொழில்களிலும் தங்கள் சம்பாத்தியத்தை முதலீடு செய்பவர்கள் ஒரு சிலரே. இதற்கு முன் சினிமாவில் சம்பாதித்ததை சிலர் சினிமாவிலேயே முதலீடு செய்து கோடிகளை இழந்துள்ளனர். ஆனால், இந்தக் கால நடிகர்கள், நடிகைகள் சினிமாவில் முதலீடு செய்ய யோசித்து வேறு தொழில்களில் முதலீடு செய்து தங்கள் சம்பாத்தியத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

கொரானோ ஊரடங்கில் நடிகைகள், நடிகர்கள் பலருக்கும் புதுவிதமான தொழில்களைத் துவக்க எண்ணம் வந்துள்ளது. அந்த விதத்தில் நடிகை ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். விசேஷங்களுக்காக பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களைச் செய்வதுதான் அந்த நிறுவனத்தின் பணி. அது பற்றி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, இந்த கொரானோ ஊரடங்கில் யு டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார் ஹன்சிகா. தற்போது அவருக்கு வாய்ப்புகள் மிகவும் குறைந்து வருவதால் இப்படி மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.