எம்ஜிஆர் – ஆக கடைசி நாள்… அரவிந்த் சாமியின் நன்றி

தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி படத்தில் அரவிந்த் சாமி, எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத் தன்னுடைய தலைவி படத்தின் கடைசி நாள் புகைப்படத்தை வெளியிட்டார்.
அதேபோல் அரவிந்த் சாமி எம்ஜிஆர் ஆக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இறுதி நாள் படப்பிடிப்பில் புகைப்படத்தை வெளியிட்டு மேக்கப் மேனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அரவிந்த் சாமி
“புரட்சித் தலைவரின் அழகுக்கும், வசீகரத்துக்கும் எவ்வளவு பக்கத்தில் என்னைக் கொண்டுபோக முடியுமோ அவ்வளவு பக்கத்தில் கொண்டுபோக, இந்த மனிதர் தனது மாயாஜாலத்தை, இந்தப் படப்பிடிப்பில் கடைசி முறையாக என் முகத்தில் காட்டுகிறார். நன்றி ரஷீத் சார், கடைசி நாள் படப்பிடிப்பு #தலைவி’. என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.