மாஸ்டர் டீசர் படைத்த மாபெரும் சாதனை

விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசர் தீபாவளியன்று வெளியானது. நீண்ட நாட்களாக ‘மாஸ்டர்’ அப்டேட் கேட்டு வந்த விஜய் ரசிகர்களுக்கு, இந்த டீசர் கொண்டாட்டமாக இருந்தது. வழக்கமாக விஜய் பட டீசர் என்றால் அதில் நிச்சயம் ஒரு பஞ்ச் வசனமாவது இடம்பெறும், ஆனால் மாஸ்டர் டீசரில் விஜய் ஒரு வசனம் கூட பேசியிருக்க மாட்டார். இது முற்றிலும் புதுமையாக இருந்தது.
விஜய்
யூடியூப் தளத்தில் ‘மாஸ்டர்’ டீசர் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்திய அளவில் வெளியான டீசர்களில் அதிக கமெண்ட் செய்யப்பட்ட டீசர் என்ற சாதனையை மாஸ்டர் டீசர் படைத்துள்ளது. மாஸ்டர் டீசரை இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.