டாப்ஸியுடன் இணையும்விஜய் சேதுபதி!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த டாப்ஸி, தற்போது ஹிந்தி திரையுலகில், முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.

டாப்ஸி தற்போது, ஹிந்தியில் ஒரு படமும், தமிழில் இரண்டு படங்களும் கைவசம் வைத்துள்ளார்.இதில், இயக்குனர், விஜயின் உதவியாளர், தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில், டாப்ஸி கதை நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில், கவுரவ தோற்றத்தில், விஜய் சேதுபதி நடிப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடித்த, லாபம் படத்தின், ‘டிரெய்லர்’ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளது.

x