அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கும் பிரபல பாடகி

ட்ரெண்ட் லவுட் நிறுவனம் நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னனி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை தயாரிப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். இது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பும், வரவேற்பும் கிடைத்து வருகிறது.

தற்போது அடுத்த ஆச்சர்யமாக, இப்படத்தில் இந்தியாவின் பெரும்புகழ்பெற்ற பாடகி உஷா உதுப் மிகபெரும் இடைவெளிக்கு பிறகு அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக, இத்தமிழ்படம் வழியாக நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பாடகி உஷா உதுப் கமலுடன் திரையில் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவரது மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு பாட்டியாக நடிக்கிறார்.