ஹிந்தி பட ‘ரீமேக்’கில் உதயநிதி!

கனா படத்தின் இயக்குனர், அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார்.

இப்படம், ஆர்டிக்கல் 15 என்ற ஹிந்தி படத்தின், தமிழ் ‘ரீமேக்’ ஆகும்.’ஜீ ஸ்டூடியோஸ்’ மற்றும் போனி கபூரின், ‘பேவியூ புரொஜக்ட்’ வழங்க, ‘ரோமியோ பிக்சர்ஸ்’ சார்பில், ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார்.

அவர் கூறியதாவது:சினிமாவில், வினியோகம் உள்ளிட்ட பல துறைகளில் தடம் பதித்த எனக்கு, தயாரிப்பாளராகும் அந்தஸ்தை, போனி கபூர் உருவாக்கி தந்து உள்ளார்.

சினிமாவில் நான் பணியாற்றிய முதல் நிறுவனம், உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனம். இன்று, அவரை வைத்து படம் தயாரிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளேன்.

போனி கபூர் மற்றும் உதயநிதிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.