எப்படித் தாங்குவாய் மகளே லாஸ்லியா தந்தை மரணம் குறித்து சேரன் உருக்கம்

லாஸ்லியாவும், சேரனும் பிக்பாஸ் 3-வது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள். அப்போது சேரனை பார்க்கும்போது தனது அப்பாவை பார்ப்பது போல் இருப்பதாக கூறிய லாஸ்லியா, அவர் மீது அதிக பாசம் கொண்டிருந்தார். சேரனும் அவரை தன் மகள் போல கவனித்து வந்தார்.
சேரன், மரியநேசன்
இந்நிலையில், லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மரணமடைந்த செய்தி அறிந்த சேரன், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: லாஸ்லியா… தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவிட்டுள்ளார்.
x