பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்

இலங்கையைச் சேர்ந்த பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கடந்த ஆண்டு தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இலங்கையை சேர்ந்த லாஸ்லியா கலந்து கொண்டு மிகவும் பிரபலாமானர்.

 

செய்தி வாசிப்பாளரான இவரின் தமிழ் உச்சரிப்பிற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவரின் தந்தை வெளிநாட்டில் வசித்து வருவதாக அந்த நிகழ்ச்சியில் கூறினார். அதன் பின் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து தன் மகளை பார்த்துவிட்டு சென்றார்.

 

தற்போது லாஸ்லியா படங்களில் நடித்து வரும் நிலையில், அவரின் தந்தையான மரியநேசன் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த செய்தியை அறிந்த இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

x