தமிழ் பட உலகில், மிக சிறந்த குணச்சித்ர நடிகராக இருப்பவர், ராஜ்கிரண். பிரபல கதாநாயகர்களுக்கு இணையான நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து வருகிறார். இவர் திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது.
