இயக்குனர் சசியின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியாலும், அதன் பின் நடித்த பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, தாராள பிரபு போன்ற படங்கள் மூலம் பிரபலம் ஆனவர் ஹரீஷ் கல்யாண். வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.

ரோஜாக்கூட்டம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் கூறியதாவது: ‘உங்களது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். படப்பிடிப்புக்கான நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.