நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று

நடிகர் மகேஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மகேஷ் பாபு தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், எனக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. வைத்தியர்களின் அறிவுறுத்தலின் பேரில் நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக்கொள்கிறேன்.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், அது தீவிர தொற்று அறிகுறியையும், வைத்தியசாலைக்கு செல்லும் அளவிலான ஆபத்தையும் குறைக்கும்.

தயவு செய்து கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.