விஜய் எனது வழிகாட்டி ; ஜூனியர் என்டிஆர்

ஆர்ஆர்ஆர் பட புரமோஷனுக்காக படக்குழுவினர் அடிக்கடி சென்னைக்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பிலும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் கலந்துகொண்டு வந்தனர்.

படங்களை பற்றி பேசுவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் தமிழ் திரையுலகில் உள்ள ஜாம்பவான்களை புகழவும் அவர்கள் தவறவில்லை. அந்தவகையில் சமீபத்தில் பேட்டியளித்த ஜூனியர் என்டிஆர், நடிகர் விஜய் குறித்த தனது கருத்துக்களை கூறியுள்ளார்.

“விஜய் என்னுடைய நண்பர், சீனியர் மற்றும் வழிகாட்டி.. அவர் தனக்கான அபரிமிதமான புகழை ஒருபோதும் தலையில் ஏற்றிக்கொள்வது இல்லை. அந்தளவுக்கு எளிமையாகவும் சராசரி மனிதனாகவும் இருக்கிறார். விஜய்யைப்போல இருப்பது என்பது ரொம்பவே கடினமானது” என்று கூறியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.