சமந்தா, நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு காரணம் இதுதானா..?

கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட திரை பிரபலங்கள் சமந்தா மற்றும் நாகசைதன்யா.

4 வருடங்கள் தொடர்ந்து இந்த திருமண பயணம் கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தற்போது நாகசைத்தன்யா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில், படங்களில் அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நாகசைதன்யா, ” நான் எந்த ஒரு படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பும், அந்த ரோல் என்னுடைய குடும்பத்தையும், கௌரவத்தையும் பாதித்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன் “.

மேலும் ” அதேபோல், என்னுடைய குடும்பத்தினரை சங்கடப்படுத்தும்படியான ரோலில் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் ” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இந்த பதிலின் மூலம் சமந்தா சில சர்ச்சைக்குரிய ரோல்களை ஏற்று நடித்தது தான் இவர்களின் விவாகரத்துக்கு காரணமோ? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.