இன்று மாலை ‘வலிமை’ ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ ரிலீஸா?

‘வலிமை’ மேக்கிங் வீடியோ இன்று மாலை வெளிவர இருப்பதாக டுவிட்டரில் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘வலிமை’ அப்டேட் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை ஒரு சில திரையுலக பிரபலங்கள் பார்த்து விட்டதாகவும் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் இந்த ‘வலிமை’ மேக்கிங் ஸ்டண்ட் வீடியோ இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘வலிமை’ ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ எந்தவித முன்னறிவிப்புமின்றி இன்று மாலை டுவிட்டர் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது