சூர்யாவின் அடுத்த திரைப்படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ மற்றும் ’ஜெய்பீம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் பிப்ரவரி 4ஆம் திகதி இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சூர்யாவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#ET coming to you in 5 languages 🔥
Get ready anbana fans!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO @thangadurai123 #EtharkkumThunindhavan #ఈటి #ಈಟಿ #ഇറ്റി #ईटी pic.twitter.com/sikc7aa4yG— Sun Pictures (@sunpictures) December 13, 2021