திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிம்பு ; காரணம் தெரியுமா?

பல தோல்விகளுக்கு பின்னர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளதோடு பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே செம பிஸியாக படங்களில் நடித்து வந்த சிம்பு தற்போது திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு Viral Infection என கூறப்பட்ட நிலையில் தற்போது தீவிர காய்ச்சல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.