தளபதி விஜயின் பீஸ்ட் படம் குறித்து வெளியான அதிரடி செய்தி

தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் பீஸ்ட் படத்தினை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகின்ற நிலையில், இதில் பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் இப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வந்தநிலையில் இன்றுடன் தளபதி விஜயின் படப்பிடிப்பு நிறைவுக்கு வருவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புக்களுக்காக தற்போது இருந்தே இணையத்தில் படம் குறித்தான பதிவுகளை இட்டு தமது மகிழ்ச்சியினை வெளியிட்டு வருகின்றனர்.