நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் ரஜினிகாந்த் (வயது 70) இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்கின்றனர்.