மகள் செளந்தர்யாவின் App-ஐ அறிமுகப்படுத்திய ரஜினி

நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் வழங்கப்பட்டது. ரஜினிக்கு விருது வழங்கப்பட்டத்தை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவ்விழாவில் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார்.

இந்த முக்கியமான நாளில், ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் Hoote ஆப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குரல் பதிவு கொண்ட இந்தியாவின் முதல் சமூக வலைதள செயலியான இதனை நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த், தனது குரல் மூலமாக முதல் பதிவை Hoote செயலியில் பகிர்ந்து இருக்கிறார். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலியை உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்படுத்தலாம்.