துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்கு – வடிவேலுவை வாழ்த்திய பிரபல இயக்குனர்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு, தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சேரனின் டுவிட்டர் பதிவு
அந்தவகையில் இயக்குனர் சேரன், நடிகர் வடிவேலுவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறுபடி துபாய்க்கு வந்தது சந்தோசம்யா வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா.. காமெடில நீங்க எப்பவும் ‘கிங்’..” என குறிப்பிட்டுள்ளார்.