சினிமாவில் எனக்கு மறுபிறவி – நடிகர் வடிவேலு

இயக்குனர் ஷங்கர் – நடிகர் வடிவேலு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

என் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் நிறைவேற்றியுள்ளார். என்னை மீண்டும் தமிழ் திரைஉலகின் திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார். மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வை ஒத்தே உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் என் ரசிகர் மன்றம் தான்.

திரைப்படத்தில் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு தடையை நீக்கியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறு பிறவி ஆகும். சுராஜ் இயக்கும் நாய் சேகர் படத்தில் வருகின்ற செப்டெம்பர் முதல் நடிக்கவுள்ளேன். இரு படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்னர் மீண்டும் காமெடியனாகவும் நடிக்க உள்ளேன் என்றார்.