கூகுள் குட்டப்பா திரைப்பட டீசர் வெளியீடு!

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் டீசர் வெள்ளிக்கிழமை வெளியானது.

கூகுள் குட்டப்பா எனும் பெயரில் தமிழில் ரீமேக்காகி வரும் கேரளத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துவருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற தர்ஷன் மற்றும் லாஸ்லியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமாரின் துணை இயக்குநர்கள் சரவணன் மற்றும் சபரி இந்தத் திரைப்படத்தை இயக்குகின்றனர்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.