பிக்பாஸ் பாலாவை சகோதரனாக ஏற்றுக் கொண்ட ஷிவானி

சமீபத்தில் நாடு முழுவதும் ரக்சா பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி சகோதர்களாக ஏற்று கொண்டனர். நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ராக்கி கட்டிய புகைப்படம் வைரல் ஆனது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, ‘நீங்கள் ரக்ஷா பந்தன் தினத்தில் யாருக்கு ராக்கி கட்டினீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ’பாலாவுக்கு’ என்று பதில் கூறி பாலாஜிக்கு ரக்ஷா பந்தன் தினத்தன்று ராகி கயிறு கட்டிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஷிவானி நாராயணன் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகிய இருவரும் காதலிப்பது போன்ற பல சம்பவங்கள் நடந்த நிலையில் தற்போது திடீரென அவர் பாலாஜியை சகோதரராக ஏற்றுக்கொண்ட விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.