நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்

பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது  56.

சித்ரா இயக்குநர் கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக சித்ரா நடித்துள்ளார்.

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என அழைக்கப்பட்டார்.

நடிகை சித்ரா கடைசியாக ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார். அந்த படம் 2020 ஜனவரி 3ந்தேதி வெளியானது.

நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறார். அவர் இந்தாண்டு பிளஸ் டு முடித்துள்ளார். குழந்தையை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்துள்ளார்.

அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இவரது மறைவிற்கு நடிகை, நடிகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.