செம்ம குத்து குத்தும் சாயிஷா… வீடியோ வெளியிட்ட ஆர்யா

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

நடிகை சாயிஷா, கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் ஆர்யாவுடன் காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், நடனமாடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் சாயிஷா தனது கணவர் ஆர்யாவுடன் இணைந்து பாக்சிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கியுள்ளார். அதுகுறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தற்போது ஆர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கோச்சிங் கொடுப்பவரை செம்ம குத்து குத்துகிறார் சாயிஷா. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.