விஜய் சேதுபதிக்கு போட்டியாக களமிறங்குவதை உறுதி செய்த சந்தானம்

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘டிக்கிலோனா’ படத்தினை கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் ஆகியோர் நடித்துள்ளதோடு,இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 10 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தியன்று இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படமும் வெளியிடப்படவுள்ளது.

இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி, சந்தானம் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறை ஆகும்.