2 டோஸ் தடுப்பூசி போட்டும் விடாத கொரோனா தொற்றுக்கு ஆளான பிக் பாஸ் ஷெரின்

கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை ஷெரின் அறிமுகமானார்.

மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.சில ஆண்டுகளாக திரையை விட்டு ஒதுங்கியிருந்த நடிகை ஷெரின், நடிகர் கமல் ஹாசன் விஜய் டீவியில் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

உடற்பருமனால் அவதிப்பட்ட ஷெரின், பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் போது எடை குறைந்து, புதிய தோற்றத்தில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை ஷெரினுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் கடந்த 3-4 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாகவும், அறிகுறிகள் எதுவும் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள ஷெரின், விரைவில் நலம் பெறுவேன் எனவும் இன்ஸ்டெகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஷெரின் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.