பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மறைவு : ரசிகர்கள் இரங்கல்

தமிழில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம்வல்த ஆனந்த கண்ணன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் மியூசிக் தொலைக்காட்சியின் தொடங்கப்பட்ட போது மிகவும் பிரபலமாக இருந்த ஆனந்த கண்ணன் அதுமற்றுமின்றி வெளிநாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளராக இருந்தவர். நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தார் ஆனந்த கண்ணன்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் தொடர்களிலும், படங்களிலும் ஆனந்த கண்ணன் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனந்த கண்ணன் மறைவிற்கு ரசிகர்கள் பலர் தங்களது இரங்கலை சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், சிறந்த நண்பன், சிறந்த மனிதன் தற்போது இல்லை. அவருக்கு என்னுடைய அழந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.