விருமாண்டியை நினைவூட்டும் விக்ரம்

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது. கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் அடங்கிய இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.
விக்ரம்
கமல், நெப்போலியன், பசுபதி நடிப்பில் வெளியான விருமாண்டி படத்தின் போஸ்டர் போல் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.