மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி அமைத்த பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா கன்னடத்தில் முதன் முறையாக நடித்துள்ள படம் ‘777 சார்லி’. கிரண்ராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் கன்னடத்தில் உருவாகி இருந்தாலும் மலையாளம், தமிழ், தெலுங்கு ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள்.

தமிழ் பதிப்பின் வெளியீட்டு உரிமையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன்பெஞ்ச் நிறுவனம் மூலம் கைப்பற்றி உள்ளார். மலையாள பாதிப்பின் வெளியீட்டு உரிமையை நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றி உள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா, பேட்ட போன்ற படங்களில் நடிகர் பாபி சிம்ஹா நடித்திருந்தார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‛சியான் 60’ படத்திலும் பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜிகர்தண்டா படத்திற்காக நடிகர் பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

x