கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ‘சென்னை 28’ நண்பர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் சென்னை 28. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் 2 ஆம் பாகமும் வெளியானது. சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த், ஜெய், வைபவ் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சென்னை 28’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகியோர் இணைந்து வீடியோ வெளியிட்டுவுள்ளனர். அந்த வீடியோவில், மாஸ்க் அணியவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ரசிகர்களுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

x