பிரபல நடிகரின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிய வந்தது. இதையடுத்து அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் மும்பையில் தான் முதல்கட்ட சிகிச்சையை பெற்றார்.

அதன் பிறகு துபாய் சென்று தன் பிள்ளைகளை சந்தித்தார். சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாக சஞ்சய் தத் அறிவித்தார்.

இந்நிலையில் அவர் ரசிகை ஒருவரின் விருப்பத்தை ஏற்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சஞ்சய் தத் எடை குறைந்து, ஒல்லியாக இருப்பது தான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம் ஆகும்.

சஞ்சய் தத் பூரணமாக குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். சஞ்சய் தத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சதக் 2. யஷின் கே.ஜி.எப். 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார் சஞ்சய் தத்.

ரன்பிர் கபூர், வாணி கபூர் உள்ளிட்டோரை வைத்து யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஷம்ஷேரா படத்திலும் நடிக்கிறார் சஞ்சய் தத்.

பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், ரிஷி கபூர் ஆகியோர் புற்றுநோயால் இந்த ஆண்டு உயிரிழந்தார்கள். இந்நிலையில் சஞ்சய் தத் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, தினமும் ஒர்க்அவுட் செய்யும் பாலிவுட்காரர்களுக்கு ஏன் அதிக அளவில் புற்றுநோய் ஏற்படுகிறது என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.