விஜய் சேதுபதி கொடூரம் ஆனால் ரசித்தேன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. செவன் ஸ்க்ரீன் சார்பில் லலித் குமார் வெளியிடும் இந்தப் படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. பொங்கலுக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

 இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. விஜய் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள முதல் படம் இதுவாகும்.  ‘மாஸ்டர்’ படம் குறித்து விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது: “எல்லோருக்குள்ளும் அழுக்கு இருக்கிறது. அதை ஒழிக்க எல்லோருக்கும் வழிகிடைக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவர் வில்லனாக நடிக்கும் போது அந்த அழுக்கை வெளியே கொண்டு வர வழி கிடைக்கிறது.
நான் கொடூரமான கேங்க்ஸ்டராக நடிக்கிறேன். ஆனால் அதை முழுக்க ரசித்து நடித்தேன்” இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.