இந்தியில் ரீமேக்காகும் திரிஷ்யம் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் திரிஷ்யம். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அத்தனையிலும் வெற்றி கண்டது.

சில மாதங்களுக்கு முன் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் ‘திரிஷ்யம் 2’ வெளியாகி முதல் பாகத்தைப் போலவே விமர்சனங்களிலும், ரசிகர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றது.
திரிஷயம் 2
இந்த வரவேற்பால் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கும், ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கன்னட ரீமேக்கும் தயாராகி வருகிறது.
தற்போது படத்தின் இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் குமார் மங்கத் பதக் வாங்கி இருக்கிறார்.
x