சோனுசூட் மோசடிக்காரர்… கங்கனா ரனாவத் லைக்

ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் பலர் சிகிச்சைக் கிடைக்காமல் இறந்து வருகின்றனர். இதனால், சந்தையில் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் சிலிண்டர்களுக்கு பெரும் டிமாண்ட் நிலவி வருகிறது. இந்த சூழலில், நிறுவனம் ஒன்றின் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டரை நடிகர் சோனுசூட் புரோமோட் செய்யும் புகைப்படத்தை நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், சோனுசூட் புகைப்படத்துடன், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள் ரூ.2 லட்சம் மட்டுமே என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ள நெட்டிசன் ஒருவர், கொரோனா காலத்தைப் பயன்படுத்தி நடிகர் சோனுசூட் பணம் சம்பாதிக்கும் ‘மோசடிக்காரர்’ வசைபாடியுள்ளார். மேலும், தனது டிவிட்டை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும் டேக் செய்திருந்தார்.
சோனுசூட்டை விமர்சிக்கும் அந்த டிவிட்டை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் லைக் செய்துள்ளார். இதனால் சோனுசூட் மோசடிக்காரர் என நெட்டிசன் கூறியதை கங்கனாவும் அமோதிக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டே அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர் மற்றும் தெர்மோமீட்டர் பிராண்டுக்காக நடிகர் சோனுசூட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
கங்கனா ரனாவத் - சோனு சூட்
இந்த தகவல், ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனத்தின் வலைதளத்திலும் இடம்பெற்றுள்ளது. சரியான மெடிக்கல் உபகரணங்களை உபயோகப்படுத்துவது குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் சோனுசூட் கூறியிருந்தார். அந்த பழைய புகைப்படத்தை எடுத்து, தற்போது நாட்டில் நிலவும் சூல்நிலைக்கு ஏற்ப சிலர் பரப்பி வருகின்றனர்.
x