சாக்‌ஷி அகர்வாலுக்கு உதவிய போலீஸ்

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்‌ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

சாக்ஷி அகர்வால்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மேலும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை ஊக்குவித்து வருவார். தற்போது போலீஸ் அதிகாரி ஒருவரை பாராட்டி பதிவு செய்திருக்கிறார்.
சாக்ஷி அகர்வால்
இதுகுறித்து சாக்ஷி அகர்வால் கூறும்போது, சென்னை ஜெமினி மேம்பாலத்தில் செல்லும்போது தனது கார் திடீரென்று பிரேக் டவுன் ஆகிவிட்டது. நீண்ட நேரம் ஆகியும் காரை இயக்க முடியவில்லை. இதனால் சாலையில் டிராபிக் ஆனது. இதை கவனித்த போலீஸ் அதிகாரி சிட்டிபாபு, காரை அங்கிருந்து அகற்றுவதற்கு உதவியிருக்கிறார். இக்கட்டான நிலையில் தனக்கு உதவிய போலீஸ் அதிகாரி சிட்டிபாபுக்கு நன்றி. கொரோனா ஊரடங்கு காரணத்தால் நீண்ட நாட்களாக தனது காரை எடுக்காததால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டது என்று கூறினார். மேலும் உழைப்பாளர்கள் தினத்தில் இதை பெருமையாக சொல்வது மகிழ்ச்சி என்றார்.
x