கொரோனா 2வது அலை – சூர்யா, விக்ரம் படங்களுக்கு பிரச்சனை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், தியேட்டர்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தாலும் முறையான விதிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி இருந்தது. இதனால், பல படங்களின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

சூர்யா - விக்ரம்

இந்நிலையில், தற்போது சூர்யா நடிக்கும் ‘சூர்யா 40’, விக்ரமின் ‘விக்ரம் 60’, சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முன்னெச்சரிகையோடு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், பல படங்களின் படப்பிடிப்புகள் இந்த வாரத்தோடு நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
x