24 மணி நேரத்தில் சித்தார்த்துக்கு வந்த 500 மிரட்டல்கள்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய தொலைபேசி எண்ணை பாஜகவின் ஐடி பிரிவினர் வெளியிட்டதாகவும் இதனால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் கால்கள் வருவதாகவும் கூறியுள்ளார்.
சித்தார்த்
24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 மிரட்டல் கால்கள் வந்து இருப்பதாகவும் அதில் பாலியல் வன்முறை, கொலை மிரட்டல் உள்ளிட்ட மிரட்டல்கள் அடங்கும் என்றும், மிரட்டல் கால்கள் அனைத்தும் ரெக்கார்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவை அனைத்தும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சித்தார்த்தின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x