டியூன் பிடிக்கவில்லை… ஆனால் பாடல் சூப்பர் ஹிட்… அனிருத் சொன்ன ரகசியம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் வேதாளம். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடல் செம ஹிட் அடித்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிருத் ‘உண்மையில் ஆலுமா டோலுமா பாடல் ட்யூன் எனக்கு பிடிக்கவில்லை. அந்த டியூனில் எனக்கு 100 சதவீத திருப்தி இல்லை. எனவே, இயக்குனர் சிவாவை போனில் அழைத்து அப்பாடலை படமாக்க வேண்டாம். வேறு பாடல் ஒன்றை கம்போஸ் செய்து தருகிறேன்’ எனக்கூறினேன்.
அஜித் - அனிருத்
அடுத்த நாள் மாலை அவரை தொடர்பு கொண்டபோது ‘ஆலுமா டோலுமா பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது’ எனக்கூறினார். அப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அப்பாடலின் வெற்றிக்கு இயக்குனர் சிவாவும், அஜித் சாருமே காரணம் என்று கூறினார்.
x