மகள்கள் தினத்தை முன்னிட்டு நகுல் வெளியிட்ட வித்தியாசமான புகைப்படம்!! பின்ன அவங்களும் மகள்கள் தானே!?

முன்னர் பெண்குழந்தைகள் பிறந்தால் அவர்களை வளர்த்து, திருமணம் செய்து கொடுப்பது என்பதை பெற்றோர்கள் பெரும் சுமையாகவே கருதினர். ஆனால் தற்போதைய உலகில், பெண் குழந்தைகள் பிறந்தால் பெற்றோர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் வளர்ந்துள்ளனர். பல உயர் பதவிகளையும் வகிக்கின்றனர்.

ஆண்களும், பெண்களும் சமம் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்குவதற்கும், பெண்களை கொண்டாடுவதற்கும்தான் மகள்கள் தினம் என்ற ஒன்றே முதலில் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு தினத்தில் மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இந்த மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் நடிகர் நகுல் வித்தியாசமான முறையில் பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், தனது மகள்கள் என புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.அதில் அவருக்கு சமீபமாக பிறந்த குழந்தை அகிரா உட்பட தனது செல்லப் பிராணிகளையும் மகள்களாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி இருப்பினும் இந்த அனைத்து குழந்தைகளும் உன்னைவிட, என்னையே அதிகம் நேசிக்கின்றன என பதிலளித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.