நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை – எய்ம்ஸ் மருத்துவக்குழு

நடிகர் சுஷாந்த்சிங் தற்கொலை வழக்கில் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் புகாரை எய்ம்ஸ் மருத்துவக்குழு முற்றிலும் மறுத்துள்ளது.

சுஷாந்தின் மரணத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க சிபிஐ அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனையின் உதவியை நாடினர். இதையடுத்து சுஷாந்தின் உடற்கூராய்வு அறிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்த அக்குழுவினர் சுஷாந்தின் அறையையும் ஆராய்ந்து தற்கொலை நடந்த நிகழ்வை மறுபடியும் நடித்து நிகழ்த்திப் பார்த்தனர். இதையடுத்து சிபிஐயிடம் நேற்று அறிக்கையினை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த அறிக்கையில் சுஷாந்த் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.