டாக்டர் அப்டேட் கொடுத்த திருப்பூர் கலெக்டர்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் சமீபத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், வலிமை அப்டேட் எனக்குறிப்பிட்டு தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த போஸ்டர் மிகவும் வைரலானது.
இந்நிலையில், தற்போது டாக்டர் அப்டேட் எனக் குறிப்பிட்டு, சிவகார்த்திகேயன் மாஸ்க் அணிந்த படி இருக்கும் போஸ்டரை அவர் பதிவிட்டுள்ளார். தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்பதை குறிப்பிட்டிருந்தார்.
விஜயகார்த்திகேயன் பதிவிட்ட விழிப்புணர்வு போஸ்டர்
இந்த பதிவை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் ‘நீங்க வேற லெவல் பிரதர்’ உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான ஒரு செயல். நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் வாக்களிக்க செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், ‘அதான் டாக்டரே சொல்லிட்டாரே, நாம் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்வோம்’ என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
x