தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்

களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் கடந்த 2010-ம் ஆண்டு அக்‌ஷயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விமலின் மனைவி அக்‌ஷயா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் விமலின் மனைவி அக்‌ஷயா.
உதயநிதி ஸ்டாலின், விமல், அக்‌ஷயா
விமலும் அவரது மனைவி அக்‌ஷயாவும் நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். அக்‌ஷயாவுக்கு திமுக சார்பில் சீட் தரப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
x