‘இந்தியன்-2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது?

தமிழ் திரையுலகில் மிக பிரமாண்டமான படங்களை இயக்கி, தொடர் வெற்றிகளை கொடுத்தவர், ஷங்கர். ‘ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, நண்பன்’ என வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
அடுத்து இவர், கமல்ஹாசன் நடிக்க, ‘இந்தியன்-2’ படத்தை இயக்கி வந்தார். அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது. கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலுக்கு தயாராகி வருவதால், இந்தியன்-2 படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஷங்கர்
இந்நிலையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு பிரமாண்டமான படத்தை ஷங்கர் இயக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. பிரபல தெலுங்கு பட அதிபர்கள் தில்ராஜு, சிரிஷ் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
இதனிடையே இந்தியன் 2 ஷூட்டிங் குறித்து ஷங்கர் கூறியதாவது: ‘‘ராம்சரண் படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும். அதற்குள் தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்துவிடும். தேர்தல் பணிகள் முடிவடைந்ததும், ‘இந்தியன்-2’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும். அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு நடிப்பார்’’ என்று ஷங்கர் கூறினார்.
x