ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.
Related Posts

இந்நிலையில் நடிகை சாக்ஷி, காதலர் தினத்தையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதற்கு எல்லைகளோ, விதிகளோ இல்லை. என்னைப் பொருத்தவரை காதலர் தினம் என்பது அன்பை வெளிப்படுத்துவது தான். இந்தாண்டு நான் காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என அவர் கூறினார்.