கொமர்ஷல் வங்கி LANKAQR கொடுப்பனவுக்கான மத்திய வங்கியின் பிரசார நிகழ்ச்சித் திட்டத்தை முனைப்பாக ஊக்குவிக்கிறது!
பொதுமக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் காரணமாக LANKAQR QR குறியீடு அடிப்படையிலான டிஜிட்டல் கொடுப்பனவின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் இந்தப் பிரசாரத் திட்டத்துக்கு முனைப்பான ஆதரவை கொமர்ஷல் வங்கி வழங்கி வருகிறது.
LANKAQR இன் கீழ் சான்றளிக்கப்பட்ட QR அடிப்படையிலான முதலாவது செயலியான ComBank Q+ சில்லறை வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் பல்வேறான வாய்ப்புக்களை வழங்குகிறது. வங்கியால் அண்மையில் வழங்கப்பட்ட அனைத்து விற்பனைப் புள்ளி இயந்திரங்களும் QR குறியீட்டுக்கான பொருந்துகையைக் கொண்டுள்ளன. அதேபோல் நிதியியல் முகாமைத்துவம் நிதியியல் நலன் கருவிகள் ஆகியவற்றை ஒரே செயலியில் சிக்கல்களின்றிக்கொண்ட புரட்சிகரமானதும் LANKAQR- ஆல் சான்றளிக்கப்பட்டதுமான ஃப்ளாஷ் டிஜிட்டல் வங்கிக் கணக்கையும் (Flash Digital Bank Account) கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தியிருந்தது.
சர்வதேசக் கொடுப்பனவுத் திட்டங்களுடன் இணைந்து டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதற்கான நவீன பொருட்களும் சேவைகளும் டிஜிட்டல் வங்கிச் செயலிகள் எங்கும் எப்போதும் கொடுப்பனவுகளையும் பரிமாற்றங்களையும் ஊக்குவிக்கும் இணைய வங்கிச் சேவைகள் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை ஊக்குவிப்பதற்காக வணிகர்களுக்கான கொடுப்பனவுப் புத்தாக்கங்கள் என டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதில் முன்னோடியாக கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கியின் மாத்தளைப் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனிடமிருந்து பாராட்டுச் சின்னமொன்றை கொமர்ஷல் வங்கியின் சார்பில் வங்கியின் கார்ட் நிலையத்தின் தலைவர் திரு. துசித சுரவீர பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.