விவசாய – உணவுத் துறை தொடக்கநிலை தொழில்முனைப்புக்களே உலக சந்தைக்குத் தேவை

நகரமயமாக்கல் மற்றும் ஊட்டச்சத்துத் தொடர்பான உலகப் போக்குகள் எமக்கு வழங்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகளுக்கு அமைய மாற்றிக்கொண்டிருப்பதுடன் விவசாய-உணவு புத்தாக்கத் துறையில் இலங்கையானது நம்பிக்கைக்குரிய புதிய ஆற்றலை உறுதிப்படுத்தியுள்ளது.

தொடக்கநிலை தொழில்முனைப்புக்களை உருவாக்கும் ஆர்வம் அல்லது கொள்கை நிலைபேறானதன்மை புத்தாக்கம் மற்றும் உலகப் போக்கு போன்றவற்றின் திசையில் தமது சிறிய நடுத்தர தொழில்முனைப்புக்களை மீள்திசைப்படுத்தல் போன்றவற்றின் ஊடாக ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளவர்கள் விவசாய-உணவு நிறுவனங்களின் உள்நோக்கங்களை முன்னிலைப்படுத்தி Good Life X Accelerator மற்றும் வர்த்தக அபிவிருத்தி வலையமைப்பின் உறுப்பினர்களாக ஒன்றுபட்டுள்ளனர்.

வவமு (Wawamu), ஷெஷான் கமகேயின் மண்ணில்லா விவசாய (ஹைட்ரோபோனிக்) தொழில்நுட்பத் தொடக்கமானது IOT நுண்ணறி கருவி மற்றும் செங்குத்துப் பண்ணைமுறை என்பவற்றைப் பயன்படுத்தி தனிநபர்கள் மற்றும் வணிகங்கள் புதிய ஆரோக்கியமான பூச்சிகொலிகள் அற்ற தாவரங்கள் / பயிர்களை வீட்டிற்குள் வளர்க்க அனுமதிப்பதுடன் இதன் ஊடாக பசுமையான நகர்புற இடங்கள் மற்றும் அதிக உள்ளூர் உற்பத்திகளுக்கான வழி எளிதாகிறது. விஹான்குன் ஆரியரத்னவின் சிந்தனையில் உருவான ஒவிட்டா ஓர்கானிக்ஸ் (Owita Organics) நுர்வோரின் சொந்த மாவட்டங்களில் உள்ள சிறிய விவசாயிகளின் உள்ளூர் மயமாக்கப்பட்ட / பரவலாக்கப்பட்ட சேதன விவசாயத்தை ஊக்குவிப்பதுடன் தூர இடங்களில் உள்ள பாரியளவிலான சேதனப் பண்ணைகளாலேயே நுகர்வோருக்குத் தேவையான விநியோகங்களை வழங்க முடியும் என்ற மனநிலை / மாதிரியை மாற்றியமைக்கிறது.

விவசாயிகள் சேதன முறைக்கு மாறுவதற்கான முதலீடுகளில் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் மற்றும் அருகிலுள்ள ழுறவைய காட்சியறைகள் அல்லது நுகர்வோரின் வீடுகளுக்கு நேரடியாக இந்த உற்பத்திகளை வழங்கினால் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என்ற உறுதிப்பாட்டை விவசாயிகளுக்கு வழங்கி உணவுத் தடத்துக்கான செலவீனங்களை Owita குறைத்து சுற்றாடல் வினைத்திறனை அதிகரிக்கச் செய்து உள்ளூர் மயமாக்கப்பட்ட பசுமை உற்பத்தியை ஊக்குவித்து நுகர்வோருக்கு போட்டியான நியாயமான விலையை வழங்கி ஒரு சாத்தியமான அண்மித்த பண்ணை மாதிரியை உருவாக்கியுள்ளது.

சிலோன் எக்ஸ்போர்ட்ஸ் அன்ட் ட்ரேடிங் (Ceylon Exports and Trading) நிறுவனமானது அதன் CoCo House உள்நாட்டில் உருவான அடுத்த சர்வதேச வர்த்தகநாமத்தை உருவாக்கும் நோக்கில் தொழிலாளர் சமபங்கு மற்றும் தரமான உற்பத்தி ஆகிய அணுகுமுறைகளை மையாகக் கொண்டு தேங்காய் மற்றும் சைவ உணவுப் பொருட்களை தயாரித்து வருகிறது. இளமையான கூர்மை மிக்க உந்துதல் உடைய மற்றும் உலகளவில் கவனம் செலுத்திய முதலாவது தலைமுறை தெங்கு வணிகத்தொழில் முயற்சியாளரான துலார டி.அல்விஸ் உடைய தலைமைத்துவத்தில் சிலோன் எக்ஸ்போர்ட்ஸ் அன்ட் ட்ரேடிங் உற்பத்தியின் தரம் மற்றும் நியமாயமான வேலை நடைமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் ஊடாக இலங்கையின் சேதன தேங்காய் மற்றும் சைவ உணவுகளின் தரமான ஏற்றுமதியை கையாளவிரும்புகிறது. குறுகிய மூன்று வருடங்களில் உலகம் முழுவதிலும் – அவுஸ்திரேலியா லத்தீன் அமெரிக்கா ஐரோப்பா ஆசியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா என பரந்துபட்ட நாடுகளுக்கு தனித்துவமான தெங்கு உற்பத்திகளை வழங்குபவராக துலார பரிணமித்துள்ளார்.

உலகின் சைவ மற்றும் இறைச்சிக்கு மாற்றீடான உற்பத்தி அதிகரிப்பில் பலாப்பழம் மற்றும் வாழைப்பூ ஆகியவற்றின் விநியோகத்தில் நிபுணராக வொர்கா நச்சுரல்ஸ் (Worga Naturals) தன்னை மையப்படுத்தியுள்ளது. விவசாய ஆதார வழங்கற் சங்கிலியின் பசுமை ஆராக்கியமான மற்றும் பாலின சமத்துவத்தை ஆதரிக்கும் நோக்கில் தொழிற்படை சக்தியில் 90 வீதமானவர்கள் பெண்களாகக் காணப்படுகின்றனர். Good Life X அல்லது GLX ஆனது ஜேர்மன் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் GIZ இலங்கையால் 2018ஆம் ஆண்டு ஆதரிக்கப்பட்டதுடன் உணவு ஆரோக்கியம் சுற்றுலா மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றில் உள்ள புத்தாக்கமான தொழில்முனைவோருக்குக் காணப்படும் அபாயத்தை உள்வாங்கும் முயற்சியாக இது தொடங்கப்பட்டது.

அத்துடன் வணிக மூலோபாயம் தயாரிப்பு வடிவமைப்பு புத்தாக்கம் மற்றும் சந்தைகளுக்கான அணுகுதல் ஆகியவற்றில் விரைவான அதிவேக கற்றலை அதிகரிப்பதற்கான மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. தொற்றுநோய் தொடர்பான முடக்கத்துக்கு முன்னர் 2020ஆம் ஆண்டு பெப்ரவரியில் இந்தத் திட்டம் விவசாய உணவு வர்த்தகத்தின் பங்குபற்றுனர்களான குட் மார்க்கட் (Good Market), லங்கா ஓர்கானிகஸ் (Lanka Organics), கிம்புலா கிதுல் (Kimbula Kithul) மற்றும் SOZO சொஸொ ஆகியோரை உலகின் பாரிய சேதன உணவு மாநாடான BioFach Germany இல் கலந்துகொள்ள அழைத்துச்சென்றிருந்தது.

பங்குபற்றியவர்களில் பாரிய சர்வதேச சேதன உணவு கொள்வனவு மற்றும் விற்பனையாளர்கள் வளர்ந்துவரும் போக்கு அமைப்பாளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள பெரு நிறுவனங்களின் சேதன வர்த்தக நாமங்கள் என்பன உள்ளடங்கியிருந்ததுடன் GLX திட்டத்தினால் வளர்க்கப்பட்ட அவர்களின் புத்தாக்கம் நிலைபேறான தன்மை மற்றும் சமபங்கு உணர்வு சிந்தனை உலகின் உணவுத் தலைவர்கள் நினைக்கும் விதத்தைவிட மிகவும் அதிகமாக இருப்பதை இந்த GLXஇனர் கண்டுகொண்டனர்.

GLX ஆனது இலங்கையில் தனது வேலை நிபுணத்துவப் பரிமாற்றம் மற்றும் ஜேர்மனி நெதர்லாந்து அமெரிக்கா தாய்லாந்து ஹொங்கொங் உள்ளிட்ட நாடுகளுக்கு அவ்வப்போதான விஜயம் போன்ற இரண்டு பணிகளிலும் சிறந்த வர்த்தக நடைமுறைகளுக்கான நிரலாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளது. ஆரம்பநிலை தொழில்முயற்சிகளுக்கான சுழற்சிமுறை Good Life Accelerator மற்றும் சிறிய நடுத்தர தொழில்முனைப்புக்களுக்கான GLX Garage உள்ளிட்ட பல்வேறு Good Life திட்டங்களுக்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைப்புக்கள் மற்றும் ஆரம்பநிலை தொழில்முனைப்புக்கள் விண்ணப்பித்துப் போட்டி அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டதும் நிபுணத்துவப் பயிற்சி ஒருவருக்கு ஒருவரான மூலோபாயங்கள் அடிப்படைகளிலான செயலமர்வு (பிரான்டிங், சந்தைக்குச் செல்லல், சட்டம், மனித வளம் ஏனையவை), விதைகளுக்கான ஆரம்பகட்ட நிதியளித்தல் மற்றும் சர்வதேச பங்கப்பங்காளர்களுடன் இணையவைத்தல் போன்ற அபிவிருத்திகளில் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வார்கள். பங்கேற்பாளர்கள் தங்களை வளர்ச்சி நிலைக்குத் தள்ளிச் சென்று ஒத்துழைப்பின் நெறிமுறைகளை எடுத்துக்கொள்ளல் ஒருவருக்கு ஒருவர் முன்னேறுவதற்கும் எதிர்காலத்தில் இந்த வலையமைப்பில் இணையஏக்கூடிய வர்த்தகங்களுடனும் இணைந்து முன்னேறுவது தவிர வேறு எந்தப் பிடியும் இல்லை. GLX இன் வெற்றியால் வளர்ந்து வரும் வணிகங்கள் வெற்றிபெற்றிருப்பதால் தம்மை பழைய மாணவர்கள் எனப் பெருமையுடன் அழைக்க முடியும்.

2020இல் ஏற்பட்டுள்ள கொவிட்-19 ன் யதார்த்தங்களின் பின்னரும் Good என்பதை மையப்படுத்திய ஆழமான யதார்த்தத்தில் நான்கு திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதுடன் முதல் வருடத்தில் 6 வணிகங்களாக இருந்த எண்ணிக்கை இரண்டாவது வருடத்தில் 20ஆக அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

விவசாய-உணவு வணிகம் என்பது தொற்றுநோய் சூழலுக்கு முன்னர் இரண்டு வருடங்களுக்கு முற்பட்ட காலத்திலேயே GLX இனால் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயமாக அமைந்துள்ளது. இத்துறை GLX இன் நிபுணத்துவம் கொண்டதாகத் தொடர்ந்தும் காணப்படுகிறது. புகழ்பெற்ற ESCP ஸ்கூல் ஒப் பிஸ்னஸ் பேர்லின் கம்பஸ் உடனான கூட்டாண்மை மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள துறைசார் நிபுணர்களின் உள்ளீடுகள் என்பவற்றைப் பயன்படுத்தி GLX உடனான நிறுவனங்கள் பிரான்டிங் சோர்ஸிங் சர்வதேச வர்த்தகத்தை அமைப்பதற்கான விபரங்களைப் பெறுவது உள்ளிட்ட முழுமையான ஆதரவுச் சங்கிலியைத் தொடமுடியும்.

GLX இன் முழுமையான உறுப்பினர்கள் பட்டியல் Good Folks, Honest Greens, Raw Juice, Serendipol, Target Agriculture மற்றும் Us On Earth போன்றவை காணபபடுவதுடன் இந்த அனைத்து வர்த்தக நாமங்களும் உள்ளூர் வலுவைச் சேர்ப்பதுடன் உலகளாவிய சந்தையில் காலடி எடுத்து வைப்பதற்கான உந்துதல் மற்றும் தயார்நிலையுடன் வணிக சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. GLX தொடர்ந்தும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதுடன் திட்டம் முடிவடைந்த பின்னரும் அவர்களின் பணியினால் ஏற்படுத்தக்கூடிய மாற்றத்துக்காக பணியாற்றுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நல்லதாக வளர வேண்டும் என்பதே GLX இன் இறுதி இலக்காக இருப்பதுடன் இதன் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்துவதற்கான வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.