கொமர்ஷல் வங்கி பொறுப்பான பிரஜைத்துவத்தை ஊக்குவிக்க மதர் ஸ்ரீலங்காவுடன் இணைந்தது

இலாபநோக்கற்ற நிறுவனமான மதர் ஸ்ரீ லங்கா (Mother Sri Lanka – MSL) அமைப்புடன் பங்காண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளதாக கொமர்ஷல் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலமாக பொறுப்பான பிரஜையாக இருப்பது தொடர்பான கருத்துருவாக்கத்தைப் பாடசாலைச் சிறுவர்களிடத்தில் ஊக்குவிப்பதற்காக இலங்கையில் செயற்படும் ஒரேயொரு நிகழ்ச்சித்திட்டமான செயற்றிட்டம் க்கு (Project RUN) அவ்வங்கி நிதியளிக்கவுள்ளது.

நாடு முழுவதும் வாழ்க்கையை முன்னேற்றுவதற்காகவும் சமுதாயங்களைச் செழிப்பாக்குவதற்காகவும் உதவும் செயற்றிட்டங்களை வடிவமைக்க மாணவர்களை ஊக்குவிக்கும் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் போட்டியொன்றுக்கு வங்கியின் நிதியளிப்பானது பயன்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் மூன்று வெற்றியாளர்கள்ரூபவ் மாகாண ரீதியிலான ஒன்பது வெற்றியாளர்கள் ஆகியோரின் சிறந்த செயற்றிட்டங்களைத் தெரிவுசெய்வது இப்போட்டித் திட்டத்துக்குள் உள்ளடங்குகிறது. ஏப்ரல் 2022இல் இடம்பெறவுள்ள பிரமாண்டமான விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். பொறுப்பான பிரஜைத்துவம் (Responsible citizenship), ஒற்றுமை (Unity), தேசியப் பெருமை (National Pride) ஆகியவற்றின் ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துக்களைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ள செயற்றிட்டம் RUN-இல் 1,500 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 75,000 மாணவர்கள் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பான பிரஜைத்துவத்தையும் பிரஜைகளின் ஈடுபாட்டையும் ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட MSL Project RUN, ஏற்கெனவே 1,400 செயற்றிட்டங்களை அமுல்படுத்தியுள்ளதோடு கல்வியமைச்சின் அங்கீகாரத்தோடு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தும் செயற்பட்டுவரும் பரீட்சித்து நிரூபிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும். கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு அறக்கட்டளையானது இந்நிகழ்ச்சித்திட்டத்தின் 2021-21 பருவத்துக்கான நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஆதரவளிக்கவுள்ளது. இக்காலப்பகுதியில் இது RUN Stage IV எனவும் அறியப்படும்.

சமுதாயத்துக்கான கொமர்ஷல் வங்கியின் சமீபத்திய அர்ப்பணிப்பான இத்திட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன் தகவல் தொழில்நுட்ப அறிவையும் விஞ்ஞான தொழில்நுட்ப பொறியியல் கணித பாடங்களில் நிபுணத்துவத்தையும் தேசிய மட்டத்தில் தனது கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு முன்னெடுப்புகள் மூலமாகப் பாடசாலைச் சிறுவர்களிடத்தில் உயர்த்தி அவர்களைப் பலப்படுத்துவதென்பது கொமர்ஷல் வங்கிக்குப் பழக்கமான ஒன்று. புதிதான இப்பங்குடைமை மூலமாக சமூகப் பிரக்ஞையுள்ளவர்களாக இளையவர்களை உருவாக்கும் முயற்சிக்கு உதவுவதில் நாம் பெருமையடைகிறோம். இதன்மூலமாக அச்சிறுவர்கள் தமது திறன்கள் மூலமாகவும் தேசியப் பொறுப்புணர்வு மூலமாகவும் சமுதாயத்துக்குப் பங்களிக்கும் நல்ல பிரஜைகளாக உருவாகுவார்கள் எனத் தெரிவித்தார்.

மதர் ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவரான கலாநிதி ஜானகி குறுப்பு கருத்துத் தெரிவிக்கையில் இந்நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் பொறுப்பான பிரஜைத்துவம் என்ற கருப்பொருளை விருத்தி செய்வதில் நாம் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டிலுள்ள இலவச சுகாதாரக் கட்டமைப்பு அல்லது இலவச கல்விக் கட்டமைப்பைத் துஷ்பிரயோகம் செய்வதை நாம் எத்தனை தடவைகள் கண்டிருக்கிறோம்? இன்னும் இலகுவான வழியில் சொல்வதானால்ரூபவ் பொது மலசலகூடம் அரசாங்க அலுவலகமொன்று அல்லது பொதுப் போக்குவரத்துப் போன்றவற்றை அவற்றைப் பற்றி அசட்டை செய்யாமல் தவறாகப் பயன்படுத்துவதை அல்லது பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதை நாம் கவலையுடன் கண்டிருக்கிறோம் அல்லவா? நாடானது பொருண்மிய அபிவிருத்தி அடைந்துவரும் நிலையில் எமக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களை உணர்ந்து நுகரும் பொறுப்பான உணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசிய தேவை உண்டென மதர் ஸ்ரீ லங்கா அமைப்பான நாம் கருதுகிறோம். ஆகவே தரம் 6 முதல் 12 வரையுள்ள பாடசாலைச் சிறுவர்களிடத்தில் மதர் ஸ்ரீ லங்கா செயற்றிட்டம் RUN மூலமாக இந்த ´மனோபாவ மாற்றம்´ திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்ரூஙரழவ் என்றார்.

இலங்கையில் அதிக விருதுகளை வென்ற நிதி நிறுவனமான கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளையும் 887 ATM வலையமைப்பையும் கொண்டுள்ளது. வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் 19 கிளைகளைக் கொண்டுள்ள பங்களாதேஷை உள்ளடக்குகின்றன. அதேபோல் மியான்மாரின் நேய்பியுடோவில் நுண் நிதி நிறுவனமொன்றையும் மாலைதீவில் முழுமையான செயற்பாடுகளைக் கொண்ட முதல் வரிசை வங்கியொன்றை பெரும்பான்மைப் பங்குரிமையோடு வங்கி கொண்டுள்ளது.