Brachytherapy கட்டமைப்பைத் தரமுயர்த்துவதற்கு 15 மில்லியனை முதலீடு செய்தது செலிங்கோ ஹெல்த்கெயார்

புற்றுநோய்க்கான Brachytherapy (உள்ளகக் கதிரியக்கம்) சிகிச்சையை வழங்கும் இலங்கையிலுள்ள ஒரே தனியார் மருத்துவமனையான செலிங்கோ ஹெல்த்கெயார் நிறுவனம்ரூபவ் தனது சிகிச்சைத் திட்டமிடல் சிகிச்சை வழங்கல் கட்டமைப்புக்களின் துல்லியத்தையும் செயற்றிறனையும் மேலும் மேம்படுத்துவதற்கான தரமுயர்த்தல்கள் தொடர்பில் அறிவித்துள்ளது.

ரூ 15 மில்லியன் முதலீடு மூலமாக ஏற்படுத்தப்படவுள்ள இத்தரமுயர்த்தல் காரணமாக தேவையான துல்லியமான சிகிச்சைகளைத் திட்டமிடவும் வழங்கவும் அதில் ஈடுபட்டுள்ள புற்றுநோய் நிபுணர்களுக்கும் மருத்துவ இயற்பியல் வல்லுநர்களுக்கும் அதிகரித்த வாய்ப்பை வழங்குகிறது என சிகிச்சை நிலையம் தெரிவித்தது.

Brachytherapy அல்லது அண்மைச் சிகிச்சை என அழைக்கப்படும் சிகிச்சை முறையானது புற்றுநோயைக் கொண்ட நோயாளியின் உடலில் கதிரியக்கப் பொருளை வைத்துச் சிகிச்சையளிக்கும் முறையாகும். பொதுவாக கருப்பை வாய்ப் பகுதி கருப்பை உட்புறம் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும் அதேபோல் களம்ரூபவ் தலையிலும் கழுத்திலும் யோனி குதம் நுரையீரல் புற்றுநோய்களுக்கும் சிகிச்சையளிக்க இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

இத்தரமுயர்த்தல் தொடர்பில் விளக்கமளித்த செலிங்கோ கதிரியக்கச் சிகிச்சை நிலையம் சமீபத்திய Oncentra Brachy 4.6 பதிப்புத் தரமுயர்த்தலைப் பயன்படுத்தி புதிய சிகிச்சைத் திட்டமிடல் கட்டமைப்பு (Treatment Planning System – TPS) வன்பொருள் பொருத்தப்பட்டதோடு MHDR V3 TCS 3.1.6 தரமுயர்த்தலில் செயற்படும் சமீபத்திய சிசிச்சை இணைமையக் கட்டமைப்பு (Treatment Console System – TCS) வன்பொருளைப் பயன்படுத்தி சிகிச்சை வழங்கல் கட்டமைப்பொன்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த Elekta மருத்துவக் கட்டமைப்புகள் நிறுவனத்தில் இலங்கைக்கான முகவரான டிமோ நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தது.

GYN பரிமாற்றக் குழாய்த் தொகுதிகள் எக்ஸ்-கதிர் குழாய்த் தொகுதிகள் (X-Ray Catheter sets), Fletcher-Williamson இடுகருவித் தொகுதிகள் போன்றனவும், இத்தரமுயர்த்தலின் போது பிரதியீடு செய்யப்பட்டன என அந்நிறுவனம் தெரிவித்தது.

உடல் உருவ வரையறைகள் (anatomy definitions), படப் பதிவு போன்றவற்றுக்காக முப்பரிமாண விளிம்பமைத்தலுக்கும் ஓரம் அமைத்தலுக்குமான கருவிகள், உட்பொருத்தல் மீள்நிர்மாணங்களுக்கான (implant reconstructions) வேகமான வடிகுழாய் மீள்நிர்மாண படிமுறைகள் (catheter reconstruction algorithms), அளவைப் புள்ளி மேம்படுத்தல் ஒழுங்கமைப்பு மேம்படுத்தல் ஆகியவற்றை இத்தரமுயர்த்தலின் விளைவாகப் பெறப்பட்டுள்ள புதிய மென்பொருள் வழங்குவதன் காரணமாக புற்றுநோய் நோயாளிகள் மேலும் துல்லியமான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒப்பீட்டுக்கான ஒத்திசைந்த திட்ட மதீப்பீடு போன்ற திட்ட மதிப்பாய்வுக் கருவிகளும் அனுகூலத்தை வழங்குகின்றன.

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விசஸ் லிமிட்டெட் நிறுவனத்தால் உரிமைப்படுத்தப்பட்டுரூபவ் முகாமை செய்யப்படும் செலிங்கோ கதிரியக்கச் சிகிச்சை நிலையமானது 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Selectron HDR Brachytherapy கட்டமைப்பொன்றைக் கொண்டுள்ளதோடு கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக brachytherapy சிகிச்சையை வழங்கியுள்ளது. நேரியல் முடுக்கி (Linear Accelerator), கதிரியக்க அயோடின் சிகிச்சை இரசாயனச் சிகிச்சை (chemotherapy) ஆகிய கதிரியக்கச் சிகிச்சைகளையும் இந்நிலையம் வழங்குவதோடு செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விசஸ் லிமிட்டெட் நிறுவனத்தால் உரிமைப்படுத்தப்பட்டுள்ள இன்னொரு நிறுவனமான Ceylinco Tomotherapy Centre, இலங்கையில் tomotherapy சிகிச்சையை வழங்கும் ஒரே நிறுவனமாகத் திகழ்கிறது.

இலங்கையின் முதல்நிலை ஆயுள் காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைஃப் நிறுவனத்தால் முழுமையாக உரிமைப்படுத்தப்பட்ட துணை நிறுவனமான செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் லிமிட்டெட்டின் இரண்டு கதிரியக்கச் சிகிச்சை அலகுகள் இலங்கையிலுள்ள தனியார் புற்றுநோய்ச் சிகிச்சை நிலையங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்ததும் குறைந்த செலவிலானதும் ஆகும். இந்நிலையங்கள் கடந்த தசாப்தத்தில் இலங்கையில் 7,000க்கும் மேற்பட்ட நோயாளர்களுக்குக் கதிரியக்கச் சிகிச்சைகளை வழங்கியுள்ளன.

x